அர்ப்பணிப்பு Elizabethtown, Kentucky, USA 62-1111M 1எல்லோருக்கும் காலை வணக்கம். நிச்சயமாகவே மறுபிரதிஷ்டை ஆராதனைக்காக இந்த அருமையான சிறு சபைக்கு இன்று காலை வந்திருப்பது ஒரு சிலாக்கியம். சகோதரி ஹூவர் (Sister Hoover) அவர்களுடன் நான் அங்கே பின்னால் உள்ள அறையில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் இந்த சபை இதற்கு முன்னால் ஒரு பரிசுத்த யாத்திரிகர் சபையாகவோ அல்லது ஐக்கிய சகோதரர்கள் சபையாகவோ இருந்தது என்று கூறினார். (பரிசுத்த யாத்திரிகர் சபை என்று நான் நம்புகிறேன். ஆம்.) ஆனால் அதை இப்பொழுது முழு சுவிசேஷ (Full Gospel) சபையாக மறுபிரதிஷ்டை செய்யும் ஆராதனையாக உள்ளது. நாமெல்லோரும் சகோதரன் ஹூவர் மிகவும் அருமையான ஒரு மேய்ப்பர், உத்தமமானவர், பிரித்தெடுக்கப்பட்டவர் என்று அறிவோம். அவருடைய தாயாரை நான் பல வருடங்களுக்கு முன்பே அறிவேன். என்னுடைய பிள்ளைகள் அவர்களை, ''ஹூவர் அம்மா“ என்று அழைக்கும் அளவிற்கு எங்கள் குடும்பம் நெருங்கியிருந்தது. பிள்ளைகள் சிறுவர்களாய் இருக்கும் போது அவர்கள் நீண்ட நாட்கள் எங்களுடனே தங்கியிருந்தார்கள். ஒரு தெய்வீக பரிசுத்தவாட்டியாக, வயதான தாயாக இருந்ததால். அவர்கள் அவர்களை அப்படி அழைத்தனர். மற்றும் அவளுடைய அருமையான பிரசங்கியான மகனுக்காக அதிகமாக ஜெபம் செய்தார். அவரும் தன்னுடைய ஜீவனை கிறிஸ்துவிடம் கொடுத்து சர்வ வல்ல தேவனுடைய பணிக்காகத் தன்னை பிரித்தெடுத்திருக்கிறார். அந்தப்படியே நீண்ட காலமாகப் பூட்டியேயிருந்த இந்த சபையை அல்லது கட்டிடத்தை அது எதற்காக எழுப்பப்பட்டதோ அதற்காக சுவிசேஷமானது முழு சுவிசேஷ ரீதியிலும், அளவிலும், தொடர்ந்திட நிற்கிறார். 2திருமதி ஹூவர் அவர்கள் என்னிடம், (திருமதி. எல்.ஜி. ஹூவர்), அவர்களுடைய சிறிய பெண் ஓர் பியானோ இசை கலைஞர் என்றும், நான் சற்று முன் வரும்பொழுது வாசிக்கப்பட்ட ''நம்பிடுவாய்'', என்ற பாடலை அவள்தான் வாசித்தாள்; என்றும் கூறினார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பதாக அவர்கள் வரும்போது அவளால் ஒரு சிறு ராகத்தைக் கூட நன்றாக வாசிக்க முடியாது. ஆனால் இன்றைக்கு அவளால் வாசிக்க முடிகிறது. அது மிக, மிக அருமையாயிருக்கிறது. என்னுடைய மகளும் இங்கு பின்பாக உட்கார்ந்திருக்கிறாள். அவள் ஜந்து வருடங்களுக்கும் மேலாக இசையைக் கற்றுக்கொண்டு வருகிறாள். அதற்காகவும் ஒரு புதிய பியானோவுக்காகவும் நான் எவ்வளவு செலவு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஒரு கீர்த்தனையைக் கூட இந்த சின்ன பிள்ளை வாசித்த அளவிற்கு அவளால் வாசிக்க முடியாது. இதில்தான் தேவனால் அருளப்பட்ட தாலந்திற்கும் நாமே உண்டாக்க நினைக்கும் தாலந்திற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. புரிகிறதா? 3இப்பொழுது, தேவன் இங்குள்ள மக்களுக்கு இந்த இடத்தைக் கொடுத்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இது தேசத்தின் இந்த பகுதிக்கு ஒரு மகத்தான கலங்கரை விளக்காக இருக்கும் என்று நம்புகிறேன். அநேக நேரங்களில் மக்கள் ஒரு சபைக் கூட்டத்தை பார்த்தவுடன், 'இந்த சபையில் அதிகமாக மக்கள் வரமாட்டார்கள்'', என்று எண்ணுகிறார்கள். சகோதரன் எல்.ஜி. ஹூவர் அவர்கள் சபையில் எழுபது அல்லது எண்பது பேர் இருக்கிறார்கள் என்று கூறினார் என்று நம்புகிறேன். நான் அதை சற்று குறைத்தோ அல்லது உயர்த்தியோ கூறியிருக்கலாம். ஆனால் ஏறக்குறைய அந்த எண்ணிக்கைதான்; இப்பொழுதான் அவர்கள் துவங்குகிறார்கள். ''நீங்கள் இன்றைக்கு இந்த தேசத்தினூடாய் உள்ள சபைகளைப் பார்ப்பீர்களானால் அவைகளிலெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள்… என்று அவர்கள் நினைக்கக்கூடும். மற்றும் சிலவற்றில் ஒவ்வொரு ஆராதனை தினங்களிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். ஆனால் தேவன் நிச்சயமாக எண்ணிக்கையைப் பார்க்கிறதில்லை. இதை நான் இந்த சிறு கூட்டத்தை உற்சாகப்படுத்துவதற்காகவே கூறுகிறேன். அவர் பார்ப்பது... அவர் எப்பொழுதும் எண்ணிக்கையை சார்ந்திராமல் தரத்தையே சார்ந்திருக்கிறார். 4வேதாகமத்தில், அப்போஸ்தலர் நடபடிகள் 19ஆம் அதிகாரத்தில், 'பவுல் மேடான தேசங்கள் வழியாகச் சென்று எபேசுவிற்கு வந்து ஒரு சபையைக் கண்டான்…. அதுதான் எபேசு சபை. கிறிஸ்துவைப் பற்றின வெளிப்பாட்டினை சபைக்காலங்கள் ஊடாக ஆராயும்போது சபைக்காலங்களில் முதலாவதாக இருப்பது இந்த எபேசு சபைதான். இந்த சபையின் பதிவின்படி மொத்தம் பன்னிரண்டு பேர்கள் இருந்தனர். எண்ணிக்கையில் பன்னிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். இந்த சபையிலும் அந்த சபையைப் போல பன்னிரண்டு பேர் மட்டும் இருந்தாலும், அவர்கள் முழுமையாக தங்களை தேவனுக்கு அர்ப்பணிக்கும் பட்சத்தில், தேவன் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரைக் கொண்டு செய்வதைக் காட்டிலும் இந்த பன்னிருவரைக் கொண்டு அதிகமாகச் செய்ய முடியும். நமக்குள்ளிருக்கும் அர்ப்பணிப்புதான் காரியம். சுவிசேஷத்தின் சத்தியமானது பிரசங்க பீடத்திலிருந்து மட்டும் செல்வதில்லை, அது மக்களின் இருதயத்திற்குள் சென்று அதற்கான பிரதி விளைவை உண்டாக்குகிறது. ஆகையால் இந்த காலை வேளையிலே இதை நான் மிகவும் சந்தோஷமானதாகக் கருதுகிறேன். 5நான் அப்படியாக அந்த வாசலுக்குள் வரும்பொழுது சகோதரன் பீலர் அவர்கள் ஜெபம் ஏறெடுப்பதைக் கேட்டேன். இன்றைக்கு 'போர் நிறுத்தப்பட்ட நாள் (ARMSTICE DAY)''. அவர் ஓர் ஓய்வு பெற்ற போர் வீரர். இப்படி ஓர் போர் நிறுத்தப்பட்ட நாள்… ஒன்று இருப்பதற்காக நாம் சந்தோஷப்படுகிறோம். சபையில் கூட இப்படிப்பட்ட போர் நிறுத்த நாள்… ஒன்றை நாம் கொண்டிருக்கலாம். சிலர் தங்களுடனேயே யுத்தத்தில் இருக்கின்றனர் மற்றும் சிலர் தேவனோடு யுத்தத்தில் இருக்கின்றனர். அவ்வண்ணமாக இருப்போரெல்லோரும் இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு போர் நிறுத்த சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிடலாமே. ரோமர் 5:1, 'இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்… என்று கூறுகிறதென்று நம்புகிறேன். இப்பொழுதும் என்னுடைய சபையிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி பிரையன்ட், சில நண்பர்களும் மற்றும் சிலரும் வந்திருப்பதை நான் கவனித்தேன். 6இந்த காலை வேளையிலே வேதாகம பள்ளியின் பாடத் தலைப்பு ஒன்றில் நான் என்னுடைய சபையில் பேசும்படியாக இருந்தேன். ஆனால் இங்கே இந்த பிரதிஷ்டை ஆராதனைக்கு வர வேண்டியிருந்தபடியால் அதை இன்றிரவுக்கு மாற்றிவிட்டேன். இன்றிரவு அங்கே சபையில் கூட்டமானது சீக்கிரமாகவே துவங்கிவிடும். நான் சரியாக ஏழு மணிக்கெல்லாம் மேடையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுதுதான் முடிக்கத் தாமதமாகாது. மற்றும், 'நான் ஏன் ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கத்திற்கு விரோதமாக உள்ளேன்“ என்ற தலைப்பில் ஒரு நீளமான செய்தி அளிக்கப் போகிறேன். அதை வேத வசனங்களின் அடிப்படையில் போதிக்கப் போகிறேன். ஆகையால் சபையிலிருந்து வந்திருப்பவர்களாகிய நீங்கள் சீக்கிரமாய் வருவது நல்லது. 7இப்பொழுது சகோதரன் ஹூவர் இங்கிருக்கிறார். கிறிஸ்துவினுடைய மகத்தான செய்தியை இங்கிருக்கும் அவருடைய மக்கள் மத்தியில் கொண்டு வருவதற்காக தன்னையே கிறிஸ்துவிடம் அர்ப்பணித்த இந்த வாலிபனுக்காய் நான் எப்படி தேவனுக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நான் ஒரு கென்டக்கியன் (Kentuckian). நான் பர்க்ஸ்வில் (Burkesvilee) என்னும் சிறு பட்டணத்திலிருந்து வருகிறேன். அது இங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு சிறிய இடம். ஆகவே ஒரு கென்டக்கியனாக கென்டக்கியர்களாகிய உங்களிடம் இங்கு வந்து இந்த மகன் கூறுவதை கேளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கிருக்கும் மக்களிடம் சென்று இந்த எல்லா இடமும் செய்தியை பரப்பி அவர்களை அழைத்தும் வாருங்கள். வேதம் சொல்லுகிறது தேவைப்பட்டால் அவர்களை வலுக்கட்டாயமாக வரும்படி கட்டாயப்படுத்துங்கள். நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், வருந்திக் கூப்பிடு. அப்படியென்றால் வலுக்கட்டாயமாக, உள்ளே வாருங்கள், என்று அழையுங்கள். 8சகோதரன் ஹூவர் அவர்களை எனக்கு இப்பொழுது சில வருடங்களாகத் தெரியும். ஒரு தேவ பக்தியுள்ள, பிரித்தெடுக்கப்பட்ட பையன் என்று அறிந்திருக்கிறேன். தேவன் தாமே அவர் முயற்சிகளை எப்பொழுதும் ஆசீர்வதிப்பாராக. உங்கள் சபையின் பாடல் குழுவினர் பாடினதைக் கேட்டேன். அந்த பாடல் குழுவினர், 'நிச்சயமாயிருங்கள்'' என்ற பாடலைப் பாடக் கேட்டபோது நான் அந்த வாசல் வழியாக எட்டிப்பார்த்தேன். அது உண்மை. நீங்கள் மற்ற காரியங்களில் மெத்தனமாக இருக்கலாம். ஆனால் உங்கள் நித்திய இடத்தைப் பற்றி மட்டும் மிக நிச்சயமுடையவர்களாயிருங்கள். புரிகிறதா? 'மிக மிக நிச்சயமாயிருக்க வேண்டும்'' என்பதை மனதில் கொண்டிருங்கள். அதில் அஜாக்கிரதையாயிருக்காதீர்கள். நீங்கள் ஒரு உணவகத்திற்குச் சென்று ஒரு சூப் கேட்கிறீர்கள். அதைப் பெறும்போது அதில் ஒரு பெரிய சிலந்தி இருந்தால் நீங்கள் நிச்சயமாக அதைப் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள். இல்லை ஐயா, நீங்கள் அதை தொடக்கூட மாட்டீர்கள். (இல்லை, ஐயா) அதினால் உங்களுக்கு மரணம் கூட ஏற்படலாம். அந்த சூப் தயாரிக்கும்போது அதிலே சிலந்தியின் விஷமும் கலந்திருப்பதால் உங்களுக்கு அது மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம். மரணத்திற்கேதுவான இந்த சரீரத்தைக் குறித்து இவ்வளவு அதிகமாக ஜாக்கிரதையுள்ளவர்களாக இருப்பீர்களானால் அழியாத அந்த ஆத்துமாவை குறித்ததான காரியம் என்ன? ஆகவேதான் தேவனுடைய வார்த்தைகள் எல்லாம் எனக்கு முழு சுவிசேஷத்தின் வடிவில் பிடிக்கும். அதை சகோதரன் ஹூவர் அவருக்குத் தெரிந்தமட்டும் தேவனிடம் வாக்குதத்தம் செய்தபடி முழு சுவிசேஷத்தின் வடிவில் பிரசங்கிப்பார் என்பதை முழு நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் அறிந்திருக்கிறேன். 9என்னுடைய மகன் பில்லி பால் (இப்பொழுது அவன் இங்கில்லை என்று நினைக்கிறேன்). அங்கே உட்கார்ந்து கொண்டு பியானோ இசைக்கலைஞர் 'நம்பிடுவாய்' என்ற பாடலின் ராகத்தை வாசிக்கும்போது, 'பில்லி, அந்த சிறிய பியானோ இசை கருவியில் மீட்கப்படும் 'நம்பிடுவாய்' என்ற பாடல் கேட்கிறதா“, என்று கேட்டேன். வட துருவத்திலிருந்து தெற்கேயுள்ள அடர்ந்த காடுகள் வரை, பூமியின் கீழே மற்றும் பூமியைச் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலுமுள்ள பாஷைகளிலும் 'நம்பிடுவாய்… என்ற அந்த சிறிய பாடலைப் பாடி என்னை மேடைக்கு அழைக்கக் கேட்டிருக்கிறேன் என்றேன். எல்லா விதமான குரல்களிலும் நம்பிடுவாய் என்ற பாடலைப் பாடி என்னை மேடைக்கு அழைத்திருக்கிறார்கள். ஒரு வேளை அவருடைய வருகையை என்னால் காணமுடியாமல் போனால், இந்த பூமியிலே என்னுடைய ஜீவன் முடிந்து என்னை அடக்கம் செய்யும்போது இந்தப் பாடலையே பாடுவார்கள் என்று நம்புகிறேன். நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். 10இந்த கட்டிடத்தை மறுபிரதிஷ்டை செய்யும் இந்த வேளையில் வேதாகமத்திலிருந்து சில வசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். மற்றும் இந்த சபையானது எந்த ஸ்தாபனத்திற்கும் கீழாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். இது தேவனுடைய ஊழியத்திற்காகவே அர்ப்பணிக்கப்படுகிறது. நாம் ஜெபிக்கிறதான இந்த வேளையிலே நம்முடைய தலைகளை சற்று தாழ்த்துவோம். 11கிருபையும் பரிசுத்தமுமான பிதாவே, நாங்கள் உம்முடைய சமூகத்திற்குள்ளாக வரும்பொழுது, விசுவாசத்தினாலே நாங்கள் இந்த அறையை விட்டு தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருகிறோம். அங்கே தங்கமயமான பலிபீடம் ஒரு வானத்திலிருந்து மற்றொரு வானத்திற்கு நீளுகிறது. அங்கு வருவதற்கு எல்லா மனிதருக்கும், கோட்பாடுள்ளோருக்கும், இனத்தாருக்கும், மற்றும் எந்த நிறத்தினராயிருந்தாலும் சரி, கிறிஸ்து யாருக்கெல்லாம் பாவ பலியாக மரித்து தன்னையே அந்த பலிபீடத்தின் மேலே வைத்தாரோ அவர்களுக்கெல்லாம் உரிமை உண்டு. அந்த கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக தைரியமாய் வருவதற்கு நமக்கு உரிமை உண்டு. இன்றைக்கு நாங்கள் பெற்றுள்ள மற்றும் பெறக்கூடிய மகத்தான சிலாக்கியங்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த மகத்தான சிங்காசனத்திற்கு முன்பாக வந்து அந்த சமாதான பலியை ஏற்றுக்கொண்டு இன்றைக்கு பூமியிலிருக்கும் உம்முடைய சரீரத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்காகவும் நன்றி கூறுகிறோம். அந்த சமாதானம் சுவிசேஷத்தின் புரிந்து கொள்ளுதலை அளிக்கிறது. இப்பொழுதும் தேவனே, இந்த காலை வேளையிலே நாங்கள் இந்த சபைக்காக ஜெபிக்கிறோம். தங்கள் அன்பிற்கு அர்ப்பணமாகவும், தங்கள் இருதயம் மற்றும் கரங்களின் அடையாளமாகவும் இந்த சிறு கூட்டத்தினர் தாங்கள் வந்து ஆராதிப்பதற்காக ஓர் இடத்தை ஏற்படுத்த இன்று காலை இந்த கட்டிடத்திற்கு வந்திருக்கின்றனர். ஆகையால் தேவனே நீர் அவர்கள் முயற்சியை ஆசீர்வதிக்க வேண்டுமாறு ஜெபிக்கிறோம். மற்றும் அருமையான சகோதரனாகிய மேய்ப்பனையும், அவர் மனைவியையும் மற்றும் குடும்பத்தினரையும், மூப்பர்கள், தர்மகர்த்தாக்கள், குழு உறுப்பினர்கள் குழுவையும், அங்கத்தினர்கள் மற்றும் எல்லோரையும் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். 12இப்பொழுது இன்றைக்கு ஓர் ஆறுதலுக்காக உம்முடைய வார்த்தையை திறக்கிறோம். நாங்கள் செய்கிறதான இக்காரியங்களெல்லாம் வேதாகமத்தின் ஒழுங்கில் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறோம். ஏனென்றால் நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலம் சமீபமாயிருக்கிறது. இன்னும் அதிகமாக நேரம் இல்லையென்பதை இன்றைக்கு நாங்கள் உணருகிறோம். ஆனாலும் இது நாங்கள் எழும்பி செயல்பட வேண்டிய நேரமாய் இருக்கிறது. இச்செய்தியை முழுவதும் பரப்பி கிறிஸ்துவின் சரீரத்திற்கென்று முன்னமே நியமிக்கப்பட்ட ஒவ்வொரு அங்கத்தினரும் இதைக் கேட்கும் வரைக்கும் மற்றும் நாங்கள் எடுத்த முயற்சி ஒவ்வொன்றும் பலனை அளித்தது என்ற நிச்சயத்தைக் கொள்ளும் வரைக்கும் தொடர்ந்து வலியுறுத்தி உந்தித்தள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். பிதாவே இப்பொழுதும் உம்முடைய வார்த்தையை ஆசீர்வதித்து உம்முடைய வார்த்தையின் மூலமாகவே எங்களோடு பேசும். நாங்களும் கவனமான இருதயத்தோடும் திறந்த செவியோடும், நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீர் விரும்புவதை மகிழ்சியோடு பெற்றுக் கொள்கிறோம். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறோம். ஆமென். 13இப்பொழுதும் இங்கு அநேகர் (வேத வசனங்களை குறிப்பெடுக்கும் பழக்கமுடையவர்களாயிருக்கிறீர்கள்). சிலர் எழுதிக்கொள்கிறீர்கள் அல்லது சிறுக்குறிப்பாக எடுத்துக்கொள்கிறீர்கள். நானும் அவ்வாறாகவே செய்வேன். நீங்களும் என்னோடு முதலாவது வேதப்பாடத்திற்கு வாசிக்க வேதத்தை திருப்பிக் கொண்டிருப்பீர்களானால், இன்று காலை வேளையிலே நாம் வாசிப்பதற்கு மூன்று வேத வாக்கியங்கள் உண்டு. ஒன்று நாளாகமம் 17: 1,2, மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் 7: 44-49 மற்றும் எபிரேயர் 10: 1-5. ஒன்று நாளாகமம் புஸ்தகத்திலிருந்து நாம் வாசிப்போம். ஒன்று நாளாகமம் 17ஆம் அதிகாரம் முதலாம் வசனம் துவங்கி வாசிப்போம். பிறகு, இரண்டாவதாக, அப்போஸ்தலரின் நடபடிகள் 7ஆம் அதிகாரத்திலிருந்து 44ஆம் வசனம் துவங்கி வாசிப்போம். இந்த சபையின் பிரதிஷ்டைக்கேற்ப இவையெல்லாம் அமைகிறது. அதன் பிறகு எபிரேயர் 10:5ஐ வாசிப்போம். தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுரு மரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான். அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டாம் நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன். 14இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்திலிருந்து 7ஆம் அதிகாரம் 44ஆம் வசனம் துவங்கி வாசிக்கலாம் மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்த கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்ட வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும், உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்கு சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உருவாக்கவில்லையா? மற்றும் எபிரேயர் புஸ்தகம், 10ஆம் அதிகாரம் 5ஆம் வசனம். ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது; பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர். 15நாம் சற்று நேரம் பேச விரும்புகிறதான இந்த வாசிக்கப்பட்ட வேதப்பாடத்தை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். இப்பொழுது தாவீது, வாஞ்சையினாலும் வெளிப்பாட்டினாலும், தன்னுடைய இருதயத்தில் ஒரு அருமையான காரியத்தை சிந்தித்தான். தாவீதோ ஒரு நல்ல மனிதன், மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவன், தேவனும் அவனை அநேக விதங்களில் ஆசீர்வதித்திருந்தார். அவன்தானே தன்னுடைய இருதயத்தில், ''நான் இங்கு ஒரு அருமையான வீட்டில் தங்கியிருந்து, தேவனுடைய உடன்படிக்கை பெட்டி திரையின் கீழாக இருப்பது சரியா?… என்றான். அது ஒரு மிகவும் அருமையான காரியம். இதை தாவீது வெளிப்பாட்டினாலே அறிந்து கொண்டான். 'எனக்கு இவைகளையெல்லாம் தந்த தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி இப்பொழுதும் கூடாரத்தின் கீழாக இருக்கிறதே‚'' என்று அவன் சொன்னான்; அவனோ கேதுருக்களால் கட்டப்பட்ட ஒரு அருமையான விலையுயர்ந்த வீட்டில் தங்கியிருந்தான். அது அவனுக்கு சரியான காரியமாய் இருக்கவில்லை.'' 16தீர்க்கதரியாகிய நாத்தானும் தேவன் தாவீதோடு இருக்கிறார் என்பதை அறிந்திருந்தபடியால் அவனும் தாவீதை நோக்கி, 'உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார்'', என்றான். அதாவது தேவன் உங்களுக்கு ஒரு வெளிப்பாட்டை தருவார் என்றால், அதைச் செய்திடுங்கள். ஆனால், அவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த இரவில்தானே தேவன் இந்த தீர்க்கதரிசியிடம், நாத்தானிடம் வந்து, 'நீ போய் என்னுடைய தாசனாகிய தாவீதிடம் சொல்'', என்றார். பாருங்கள், நான் அதை விரும்புகிறேன். ஓ வேறு வார்த்தைகளில் சொன்னால், 'எனக்கு அவனுடைய தைரியமும்; அவருக்கு ஒரு இடத்தைக் கட்ட வேண்டும் என்ற சிந்தனையும் பிடித்திருக்கிறது. 'ஆனால் நானோ ஒரு வீட்டிலே தங்கினதில்லை. நான் இந்த பூமிக்கு வரும்பொழுது நான் தங்கி என் மக்களை பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ஒரு வாசஸ்தலமும் இல்லை. நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் வாசம்பண்ண ஓர் இடமும் இல்லை. நான் எந்த ஒரு நியாயாதிபதியையும் எனக்கு கேதுருவில் ஒரு வீட்டை கட்டுவதற்கு கட்டளையிடவில்லை, ஆனால் ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கு போனேன் என்றார். இன்றைக்கு அவர் செய்கின்ற அதே காரியம் போலவே இருக்கிறது அல்லவா. 'நான் என் மக்களை சந்திப்பதற்காக ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கும்; ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கும் சென்றேன்''. வேதத்தில் இப்படியாய் கொடுக்கப்பட்டிருக்கிறது, 'நீ போய் தாவீதினிடத்தில் சொல், நீ உன்னுடைய தகப்பனுடைய கொஞ்சம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாய், நான் உன்னை அந்த ஆட்டுமந்தையை விட்டு வெளியே எடுத்தேன். பூமியிலிருந்த பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். இடப்பக்கமும் வலப்பக்கமும் இருந்த உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கினேன். தாவீதே, நான் உன்னை நேசிக்கிறேன். உன்னுடைய வாஞ்சைகளெல்லாம் சரியானவை என்பதை அறிந்திருக்கிறேன். உன்னுடைய குறிக்கோள் எல்லாம் நியாயமானவைகள். நீ என்னை நேசிக்கிறாய் என்பதையும் அறிந்திருக்கிறேன்'' என்றார். 17சங்கீதத்தில் தாவீது எப்படியாக நித்தமும் தேவனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான் என்பதை நம்மால் காண முடியும். இன்றைக்கு அநேகர் நம்முடைய சொந்த சாதனைகளைக் குறித்தும் மென்மேலும் நம்மை எப்படியாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதையுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாவீதோ தேவனுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையே நித்தமும் சிந்தித்துக் கொண்டிருந்தான். ''தாவீதே, உன்னுடைய வாஞ்சைகளை நான் அறிந்திருக்கிறேன். மேலும் நான் உனக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்பதை நீ அறிய விரும்புகிறேன். நீ வெறும் ஒரு சிறு பையனாக இருந்தாய். உன்னைப் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை, உன் தகப்பன் கூட உனக்கு கொஞ்சம் ஆடுகளை கொடுத்து அதை மேய்க்கும்படிக்கு அனுப்பிவிட்டார். ஆனால் நானோ உன்னுடனே கூடவே இருந்தேன். உன்னுடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இருந்த எதிரிகளையெல்லாம் அகற்றினேன். உன்னுடைய வாஞ்சைகளெல்லாம் சரியானவைகளே. ''ஆனால் தாவீதே, நீயோ ஒரு யுத்த புருஷன். அதிகமாக இரத்தம் சிந்தினவன். ஆகையால் இதை நீ செய்ய என்னால் அனுமதிக்க முடியாது. ஆயினும் ஒரு காரியத்தை நான் உனக்கு வாக்களிக்கிறேன். நான் எழுப்பும் உன் கர்ப்பப்பிறப்பாகிய குமாரனே தேவாலயத்தைக் கட்டுவான்.'' 18இப்பொழுது பூலோகமானது பரலோகத்தின் நிழலாயிருக்கிறது என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். இயற்கையானது ஆவிக்குரிய மாதிரியாய் இருக்கிறது. உண்மையில் அவர் தேவாலயத்தை குறித்துப் பேசும்போது அந்த ஒருவராகிய கிறிஸ்துவைக் குறித்தே பேசுகிறார். ஆனால் இயற்கையான மாம்சத்தில் அவர் தாவீதின் குமாரனாகிய சாலொமோன். பின்னர் நாம் 1இராஜாக்களின் புத்தகத்தில் (நீங்கள் அதை வாசிக்க விரும்பினால்) அதை வாசிக்கலாம். சாலமோன் சமாதானமும் ஞானமும் உடையவனாகையால் தாவீது கட்டவிருந்த தேவாலயத்தை அவன் கட்டினான். தாவீது யுத்தம் செய்து அதிக இரத்தம் சிந்தினது போல அவன் யுத்தம் செய்யவில்லை. அவனோ சமாதான புருஷன். தேவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற போது அவன் ஞானத்தைக் கேட்டபடியினால், அவர் அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார். அவன் தேவனிடத்தில் தன்னுடைய மக்களை எப்படி வழிநடத்த வேண்டுமோ அதற்கான ஞானத்தை மட்டுமே கேட்டான். அவன் வேண்டுமானால் மகத்தான வரங்களையெல்லாம் கேட்டுப் பெற்றிருக்கலாம், ஆனாலும் அவன் தேவனுடைய ஜனத்தை நேர்த்தியாய் வழிநடத்த தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டான். 19நாமும் ஜெபத்தோடு அதேபோன்று புரிந்துக் கொள்ளுதலை கேட்டுப் பெற்றுக் கொள்வோமானால் தேவனுடைய பிள்ளைகளுக்கு நலமானதாய் இருக்கும். இந்த பழைய சபையை எடுத்து இன்றைக்கு மறுபிரதிஷ்டை செய்கிறது இந்த மேய்ப்பருடைய எண்ணம் என்றே நினைக்கிறேன். இந்த தேவனுடைய ஜனத்தை மழை, பனி போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ஒரு இடத்தை ஆயத்தம்பண்ண முயற்சிக்கிறார். தேவன் தாவீதினிடத்தில் எப்படியாக அதை கனப்படுத்தினாரோ அதேபோல் இந்த நபரிடத்திலும் கனப்படுத்துவார். 20இப்பொழுதும் இதில் ஒரு மகத்தான ஆவிக்குரிய காரியம் இருக்கிறது என்று காண முடிகிறது. அதைப்பற்றிதான் நான் முக்கியமாகப் பேசப் போகிறேன். 1இராஜாக்கள் புஸ்தகத்தை நீங்கள் வாசிப்பீர்களானால் இந்த காரியத்தை உங்களால் காண முடியும். தேவனால் தன்னுடைய தகப்பனாருக்கு அவனால் கட்டப்படும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தேவாலயத்தை வாலிபனாகிய சாலொமோன் கட்டத் துவங்கினான். பாருங்கள், அவன் சரியாக வாக்குத்தத்தங்கள் மேலாகவும் வேத வசனங்களின் ஒழுங்கிலும்; நிற்கிறான். நீங்களும் வெற்றியடைவதற்கு அதைத்தான் செய்ய வேண்டும்; தேவனுடைய வாக்குத்தத்தங்களின் ஒழுங்கில் நில்லுங்கள். இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ செல்வது எவ்வளவுதான் சிறப்பாகத் தென்பட்டாலும்; தேவனுடைய வார்த்தையின் ஒழுங்கில் சரியாக நில்லுங்கள். இந்த தேவாலயம் அவனால்தான் கட்டப்படும் என்று தேவன் அவனுடைய தகப்பனாகிய தாவீதிற்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை சாலமோன் அறிந்திருந்தான். 21இங்கே ஒரு காரியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த தேவாலயத்தை கட்டுவதற்குத் தேவையான எல்லா பொருட்களும் பாலஸ்தீன தேசத்திலேயே கிடைக்கவில்லை. ஏனென்றால் அவை அத்தனையும் அங்கே இல்லை. அவன் அந்த தேவாலயத்தை கட்டுவதற்கான பாகங்களைக் கண்டறிய உலகத்திலுள்ள மற்ற இடங்களுக்கு; அன்றைக்கு அறியப்பட்டிருந்த தேசங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது. இது எவ்வளவு அழகான மாதிரியாக இருக்கிறது. தேவன் தமக்கானவற்றை யூதர்களிடத்திலிருந்து மட்டுமோ அல்லது வெள்ளையர்களிடமிருந்தோ, பழுப்பு நிறத்தவரோ அல்லது சிவப்போ கறுப்போ அல்லது எந்த நிறத்தினராகயிருந்தாலும், அல்லது அமெரிக்க தேசத்திலிருந்து மட்டுமோ அல்லது கனடா தேசத்திலிருந்து மட்டுமோ அல்ல; அவர் தமக்கானவற்றை உலகம் முழுவதிலிருந்தும் எடுத்துக் கொள்கிறார். 22அவர்கள் ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட கல்லை தேசத்தின் ஒரு பாகத்திலிருந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்றால் இதனோடு இணைப்பதற்கு இன்னொரு பாகத்தை மற்றொரு தேசத்திலே வெட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே கடந்து சென்றிருக்கும். மக்களுக்கு இப்படி வித்தியாசமான வடிவத்தில் கற்கள் வெட்டப்பட்டிருப்பதைப் பார்ப்பதற்கு விநோதமாக இருந்திருக்கும். ஆனால், தேவன் தம்முடைய சொந்த பாணியிலே ஏதோ ஒரு காரியத்தை செய்து கொண்டேயிருந்தார். நான் நினைக்கிறேன், அவர் அன்று செய்ததை பிரதிபலிக்கும் விதானத்திலேயே இன்றைக்கும் செய்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தாம் விரும்பும் விதானத்திலேயே அவர்களை செதுக்குகிறார். வெட்டப்படும் அந்த மூலப்பொருட்களை எல்லாம் அத்தேசத்தினர் பார்க்கும்போது அது அவர்களுக்கே விநோதமாக தோன்றும் வகையில் இருந்தது. மற்றும் அவைகளை எல்லாம் மாட்டு வண்டிகள் போன்றவற்றைக் கொண்டு நகர்த்திச் சென்றனர். சிலவற்றை கடல் மார்க்கமாகவும், சிலவற்றை மாட்டு வண்டிகளின் மூலமாகவும், மற்றும் சிலவற்றை யோப்பா பட்டணத்திற்கு மிதக்கும் கட்டுமரங்களின் மூலமாகவும் கொண்டு செல்லப்பட்டு பின்பு உள்ளே எடுத்துச்செல்லப்பட்டது. மொத்தத்தில் அவை எல்லாம் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்திற்கு வந்து சேர்ந்தது, அது தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்கு மட்டுமே. 23கேதுரு மரங்கள் லீபனோனில் வெட்டப்பட்டது. இன்றைக்கு செம்மரம் என்பவை எப்படி கலிபோர்னியா மாகானத்தில் மட்டும் கிடைக்கிறதோ அதேபோன்று அந்த லீபனோனின் கேதுருக்கள் தான் முழு உலகத்திலும் பிரசித்தி பெற்றிருந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் மோசல் பாய் (MOSSEL BAAI) என்னும் ஒரு இடம் இருக்கிறது. அங்கே கிடைக்கும் பிரபலமான ஸ்டிங்க் வுட் என்னும் மரம் வேறு எங்குமே கிடைக்காது. நாட்டின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான கட்டுமான மரங்கள் கிடைக்கின்றன. அப்படியாக லீபனோனில் காணப்படும் கேதுருக்கள் மிக உயரமாக, இறுக்கத்துடன் காணப்படும். ஏனென்றால் அது சற்று சூடான பிரதேசம். ஒரு பிரதேசம் எவ்வளவு சூடாக இருக்கிறதோ அவ்வளவு இறுக்கமாக அதன் மரங்கள் இருக்கும். அது குளிராக இருக்கும் பட்சத்தில் அது மென்மையாக இருக்கும். இதற்கும் கூட ஒரு ஆவிக்குரிய மாதிரியான அர்த்தம் இருக்கிறது. குளிர்ந்து போன, உணர்ச்சியற்று (COLD) அலட்சியமாக இருப்பவர், திடனற்று நிலையற்றவர். ஆனால் அன்பாக ஆவியில் (WARM) நிரப்பப்பட்டிருந்தால், அது நிலையுள்ளதாக எஜமானனின் கரத்தில் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். 24இப்பொழுது, அந்த கேதுரு மரங்கள் எல்லாம் வெட்டுகிறவர்களைக் கொண்டு வெட்டப்பட்டது. அவைகள் வரைபடத்தைக் கொண்டு உலகத்தின் வெவ்வேறு பாகங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. நீங்கள் நன்றாக கவனிப்பீர்களானால் மோசே சீனாய் மலையின் மேல் பரலோகத்தில் பார்த்த அமைப்பிலிருந்து சாலமோன் சற்றும் விலகவில்லை. தான் கண்ட தரிசனத்திலிருந்து மோசே திரும்பின போது, அவன் ஒரு கூடாரம் அமைத்து, பரலோகத்தில் அவன் கண்டதை அப்படியே செய்தான். அதேபோல் சாலொமோனும் தேவாலயத்தை கட்டினபோது, அவன் எவ்வாறு அந்த அமைப்பையும் விதத்தையும் கண்டானோ அவ்வாறாகவே கட்டினான். மோசே கட்டின கூடாரம் நிலையற்றது, ஏனென்றால் அது இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருந்தது. ஆனால் சாலமோனோ மோசே பரலோகத்தில் என்ன பார்த்தானோ அவ்வண்ணமாகவே தேவாலயத்தைக் கட்டினான். கட்டமைக்கப்பட்டது எல்லாம் சரியாக ஒன்றிணைக்கப்பட்டது. நாம் வேத வாக்கியங்களை விட்டு விலகவே கூடாது என்பதற்கு அது எவ்வளவு அருமையான ஆவிக்குரிய மாதிரியாக இருக்கிறது. அந்த மாதிரியை எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றுங்கள். ஆகையால் தான் முதலாம் சபையின் மாதிரியிலேயே அதற்கடுத்ததாக வரும் சபையும் இருக்க வேண்டும். அதேபோல தான் ஆதியில் உள்ள பிரகாரமாகவே எல்லோரும் இருக்க வேண்டும். ஒரு உண்மையான சபையை தேவன் அந்தவிதமாகத்தான் வைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். சரியே‚ 25பொருட்கள் எல்லாம் அதினதின் சொந்த தேசத்திலேயே வெட்டப்பட்டு ஒரே இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவையெல்லாம் ஒன்றாக கொண்டு வரப்பட்ட போது. (நான் இப்பொழுது 16ஆம் அதிகாரத்திலிருந்து வாசித்து மேற்கோலிடுகிறேன்). அவையெல்லாம் ஒன்றாக கொண்டுவரப்பட்டபோது அது மிகச் சரியாகப் பொருந்தியது. நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற அந்த கட்டிடப்பணியில் ஒரு கல்லையாகிலும் மீண்டுமாக வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கட்டுமான, கட்டிட வேலையைக் குறித்துப் பேசுவோமானால்‚! அந்த நாற்பது ஆண்டுகளிலும் அங்கேதானே ஒரு வெட்டும் சத்தமோ அல்லது உளியின் சத்தமோ கேட்கப்படவில்லை. அது என்ன காட்டுகிறது என்றால், நாம் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அதை தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தின்படி செய்யும் போது. இப்பொழுது, அந்த கற்களில் பல பார்ப்பதற்கு விநோதமாக இருந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறான மற்றும் விநோதமாக தோற்றமளிக்கும் ஒவ்வொரு கல்லுக்கும் தேவாலயத்தில் ஒரு இடம் இருந்தது. தேவன் அவற்றிற்கெல்லாம் ஒரு இடத்தை வைத்திருந்தார். நம்முடைய ஊழியங்களும் அதற்கொப்ப ஓர் சிறந்த மாதிரியாக அல்லது எதிர்மறையாக இருக்கிறது. அது நம்முடைய ஆராதனை முறையிலுள்ள விநோதத்தையும் விவரிக்கிறது. ஆனாலும் அந்த ஆலயம் அந்த அசலான ஆலயமானது; சில நிமிடங்களில் அதற்கு வருவோம்; ஒன்றுகூடும் போது விநோதமாக செயல்படும் ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக இடம் இருக்கும். நம்முடைய செயலும் சிலருக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும், ஆனாலும் அதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய சபையை செதுக்கிக் கொண்டிருக்கிறார். ஆகையால் ஒவ்வொரு சிறு கல்லும் சரியாகப் பொருந்துவதற்கான இடம் ஒன்று இருக்கிறது. 26ஒரு காரியத்தை நினைவில் கொள்ளுங்கள்: எவ்விடத்தில் இந்த கற்களெல்லாம் ஒன்றாக கட்டமைக்கப்படுமோ அந்த இடத்திலிருந்து அப்பால் அவையெல்லாம் செதுக்கப்பட்டன. அங்கு கொண்டு வரப்பட்டபோது அதற்குமேல் எந்த ஒரு மெருகேற்றமும் தேவைப்படவில்லை. அது ஏற்கனவே மெருகேற்றப்பட்டிருந்தது. அது அதன் இடத்தில் சரியாகப் பொருந்தும்படிக்கேற்ப தேவன் அதை செய்து வைத்திருந்தார். ஓ, எப்படியான ஆவிக்குரிய மாதிரியாக இருக்கிறது. தேவனுடைய ஒவ்வொரு வரமும், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களின் ஒவ்வொரு விநோதமான செயலுக்கும், அதற்கென ஒரு இடம் இருக்கிறது. அது சரீரத்தில் சரியாக இணையும். அது அதனுடைய இடத்தில் பொருத்தப்படும். அதன்படியே ஒரு அருமையான, பரிசுத்தமான, பிரித்தெடுக்கப்பட்ட சிலுவை வீரனைப் பார்த்து, 'இப்பொழுது, அது தேவனிடமிருந்து உண்டான காரியம் இல்லை“ என்று கூற அநேகர் முற்படுவோம். 'அன்றைக்கு நாம் சபையில் இருக்கும் போது சில காரியங்களைக் கேட்டோம் அல்லவா, அது தேவனிடத்திலிருந்து வந்ததாயிருக்க வாய்ப்பே இல்லை” என்றும் கூறுகிறோம். ஆனால் அது தேவனுடைய வார்த்தையின் ஒழுங்கில் இருக்குமானால், அதே மாதிரியாக இருக்குமானால், பார்ப்பதற்கு விநோதமாக இருந்தாலும் அதற்கும் ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும். புரிகிறதா? அது சரியாகப் பொருந்தும். அதற்குமேல் அதற்கு எந்தவொரு மெருகேற்றலோ பளபளக்கச் செய்தலோ அவசியமில்லை. அது சரியாகத்தான் பொருந்தும் ஏனென்றால் அந்த மகத்தான கட்டிட வடிவமைப்பாளராகிய கிறிஸ்துவே அதை இப்பொழுது ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்ப்பதற்கு விநோதமாகவே இருக்கும். 27இப்பொழுது அடுத்த அதிகாரத்தில் நாம் பார்ப்போம் என்றால், அங்கே அந்த கட்டிடத்தில் ஒரு மிகவும் விநோதமான கல் ஒன்று இருந்தது. ஆகையால் அந்த கட்டிடம் கட்டுபவர்கள் அதை புறம்பே தள்ளி வைத்துவிட்டனர். அதை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து, 'அந்தக் கல் மிகவும் விநோதமாக இருக்கிறது. அதை பயன்படுத்த முடியாது. அதற்கு இங்கேயெல்லாம் இடம் இல்லை'' என்று கூறி விட்டனர். ஆனால் இங்கே கவனியுங்கள். அந்த கட்டிடம் கட்டுபவர்களுக்குதான் அதைப் பற்றி வித்தியாசமாகத் தெரிந்திருக்க வேண்டும். இயேசு அதைப் பற்றிப் பேசினார். அதன்படியே அவர்கள் அந்த கட்டிடத்தை உயரமாகக் கட்டினார்கள். அந்த நேரத்தில்தானே அவர்கள் அதில் ஒரு கல்லை தவற விட்டிருப்பதை அறியவில்லை. அவர்களுக்கோ அந்த கல் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. அவர்கள் எல்லா கப்பல்களிலும் தேடியிருக்கக்கூடும். அப்படியே எல்லா மாட்டு வண்டிகளிலும் கூட தேடிப் பார்த்திருப்பார்கள். யோப்பாவிற்கு ஆட்களை அனுப்பி, 'வேறு ஏதாவது சரக்குகள் வந்திருக்கிறதா?'' என்றோ அல்லது வருகின்ற வழியில் ஏதாவது கற்களை தவறவிட்டீர்களா? என்றோ கேட்டிருப்பார்கள். ஏதோ ஒன்று குறைந்து காணப்பட்டது. 'இந்த இடத்தில் பொருத்துவதற்கான அந்த கல் எங்கே இருக்கிறது என்றே எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை'' என்றும் வினாவியிருப்பார்கள். அதை எல்லா இடத்திலும் தேடிப்பார்த்த பிறகு தான் அது அங்கே தரையிலேயே இருக்கிறதை கண்டார்கள். அதுதான் வீடுகட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட அந்த பிரதான மூலைக் கல்லாகும். இயேசு அதைப் பற்றிதான், 'வீடுகட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட அந்த கல்லை பற்றி நீங்கள் படிக்கவில்லையா? அதுதான் பிரதான மூலைக்கல், எல்லாவற்றுக்கும் தலையானது, அதில்தான் அந்த முழு கட்டிடமும் நிலைபெற்றிருந்தது'', என்று கூறினார். 28இன்றைக்கும் கூட தேவனை ஆராதிக்கிற ஆவிக்குரிய வீட்டையும் கட்டினவர்கள் கட்டினது மிகப்பெரிய தோல்வி என்றே நான் நினைக்கிறேன். நாம் நம்முடைய ஸ்தாபனத்தின் மூலமாக வருகிறோம். அதை உத்தமமாகச் செய்கிறோம். நம்முடைய ஆண் பிள்ளைகளையும் பள்ளிகளுக்கு அனுப்பி, சபையார் முன்பாக அருமையாகப் பேச உளவியல் பாடங்களையும், வேதாகமத்திலுள்ள சரித்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறோம். தேவாலயத்தில் அருமையான இருக்கைகளைச் செய்து வைக்கிறோம். மிக உயரமான கோபுரங்களைக் கட்டுகிறோம். அருமையான இசையை கொண்டிருக்கிறோம் மற்றும் எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனாலும் ஏதோ ஒன்று தவறாக இருப்பதை உணருகிறோம். மனிதனால் உண்டாக்கப்பட்டவைகளாலும், கல்வியினாலும், உதவித்தொகைகளாலும் மற்றும் வேதாகம பள்ளிகளையும் கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கிறோம். நாம் அதை கல்வியின் மேலும், உதவிதொகைளின் மேலும், ஸ்தாபனங்களின் மேலும் கட்டிட முயற்சிக்கிறோம். ஆனால் இந்த விநோதமான வித்தியாசமான கல்லை நாம் ஏற்றுக் கொள்ளாதப்பட்சத்தில் அவைகளெல்லாம் பிரயோஜனமில்லை. அந்த கட்டிடத்தை கட்டி முடிக்கும் நேரத்தில்தான் விடப்பட்டிருந்த அந்த துவாரத்தில் இந்த விநோதமான கல்தான் சரியாகப் பொருந்துகிறது என்று கண்டார்கள். இன்றைக்கு இருக்கும் ஆவிக்குரிய கட்டமைப்பாளர்களும் அப்படிதான் இருக்கிறார்கள். அந்தபடியே பெந்தெகொஸ்தே நாளில் இடப்பட்ட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய அந்த பிரதான மூலைக்கல்லை வீடுகட்டுகிறவர்கள் தள்ளினதாலே கிறிஸ்துவின் மணவாட்டியென்னும் கட்டிடம் மணவாளனுக்கு தயாராகவில்லை. புரிகிறதா? 29அதனுடைய செயல் விநோதமாக இருந்தது. மற்றும் அவர்கள் நம்முடைய எந்தவொரு உளவியல் சார்ந்தவற்றிலோ, நம் கல்வி முறையிலோ, நாம் கற்ற விதமாகவோ, அல்லது கோட்பாடுகளினுள்ளோ பொருந்தாமல் விநோதமாக செயல்படும் மக்கள். அது அங்கு பொருந்தவில்லை. அது மிக விநோதமாகவும், வித்தியாசமாகவும், மனிதனுடைய எந்தவொரு திட்டங்களோடோ அல்லது சபை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனைகளோடு ஒத்துப் போகாமலும் இருந்தது பொருந்தாததினால் வெளியே உதைத்துத் தள்ளப்பட்டது. 'இது மிகவும் தேர்ச்சிபெற்ற அறிவாளிகளைக் கொண்ட குழுவாக இருக்க வேண்டும். நன்றாக அருமையான உடை உடுத்தின கூட்டமாக இருக்க வேண்டும். அல்லது இந்த மாதிரியான கூட்டமாக இருக்க வேண்டும்“ என்பதற்காக நாம் நம்முடைய ஐந்து புலன்களாகிய பார்வை, ருசி, மற்றும் தொடு உணர்வுகள் போன்றவற்றை திருப்திபடுத்துவதற்கேதுவான ஒரு கல்வித் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோம். பெரும்பான்மையானவை கண்கள் மூலமாகவே செயல்படுகிறது. எங்களுடைய அருமையான மக்களைப் பாருங்கள். இந்த பட்டணத்திலேயே மிகவும் சிறந்த எங்கள் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். இந்த பட்டணத்தின் மேயர் கூட எங்கள் சபைக்குத்தான் வருகிறார். மற்றும் இந்த பட்டணத்திலுள்ள முக்கியமான அதிகாரிகளும் காவல்துறைத் தலைவரும் இங்குதான் வருகிறார்கள்…. இப்பொழுது அந்த கட்டிடத்தின் சபையில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமானால், அதில் வெறும் கற்களும் சுண்ணாம்பு கலவையும் மட்டுமே இருக்கிறது. அந்த கட்டிட வேலை தொடர்ந்து நடைபெறவில்லை. வழியை புறக்கணித்தார்கள். தேவன் ஏற்படுத்தி வைத்திருந்த கல்லை அவர்கள் புறம்பே தள்ளினார்கள். 30அடுத்த அதிகாரத்திலேயே வீடு கட்டுகிறவர்கள் தாங்கள் தவறாயிருக்கிறோம் என்று உணருகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். அவர்களிடம் மற்றெல்லா கற்களும் இருந்த போதிலும் அவர்களால் அவைகளை ஒன்றிணைக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு துவாரம் மட்டும் அடைபடாமல் இருந்தது. எங்கோ அமைப்பு சரியாக இல்லை. ஆகையால் தேவன் முன்குறித்த கற்கள் நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது. பாருங்கள்‚ அதை எபேசு முதற்கொண்டு லவோதிக்கேயா முற்றுமாக நாம் பெற்றிருந்தோம். நாம் இப்பொழுது வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின அந்த தலைக்கல்லுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய வருகையாகிய தலைக்கல்லுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது... அறிக்கையிடுதல்கள்தான் அந்த மகத்தான கற்கள். இப்பொழுது அறிக்கையிடுதல் என்பது ஒரு கல் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகையால்... 31கத்தோலிக்க மக்கள் கூறுகிறது என்னவென்றால்... இயேசு, 'இந்த பாறையின் மேல் (அல்லது கல்லின் மேல்) நான் என்னுடைய சபையைக் கட்டுவேன்'' என்று சொன்னார். இப்பொழுது, கத்தோலிக்க சபையானது, 'அது பேதுரு, ஏனென்றால் அவன்தான் அந்த கல். அந்த எழுத்தின்படியான மனிதன் சீமோன் பேதுருதான்'' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் சில நாட்கள் கழித்து அவன் பின்வாங்கிப் போனான். அதேபோல் பிராடஸ்டன்ட் மக்கள், 'கிறிஸ்துவே அந்த கல்'' என்று குறிப்பிடுவதை நாம் காண்கிறோம். இதை நான் முரண்பாட்டிற்காக கூறவில்லை ஆனால் நீங்கள் வேத வசனங்களை கவனிப்பீர்களானால், அவர்கள் இருவரில் ஒருவரும் இல்லை. ஆனால் அது என்னவென்றால், பேதுரு கிறிஸ்து யார் என்ற வெளிப்பாட்டின் பெயரிலே இட்ட அறிக்கையே. அங்கே அவர்தாமே அவர்களிடம், 'மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்கிறார்கள்?'' என்ற கேள்வியைக் கேட்டார். 'சிலர் மோசே என்றும், சிலர் எலியா என்றும், அதோ மரித்த அந்த தீர்க்கதரிசியின் எலும்புகள் தான் எழும்பியிருக்கிறது என்றும் சிலர் கூறினார்கள்'' என்றனர். ஆனால் அவரோ, 'நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்'' என்று கேட்டார். அதுதான் அந்தக் கேள்வி. அதற்கு பேதுரு, 'நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்றான். அப்பொழுது அவர் அவனை நோக்கி, 'யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. (நீ ஒருபோதும் இதை ஒரு புத்தகத்திலிருந்து படிக்கவில்லை அல்லது ஒரு வேதாகம பள்ளியிலிருந்து அறிந்திருக்கவில்லை). ஆனாலும் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் (தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டின் மேல், அவரே அந்த வார்த்தையாயிருக்கிறார்), நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'', என்றார். 32அதுதான் உண்மையான சபை- அழிந்து போகக்கூடிய சுண்ணாம்பும், கற்களும் செங்கற்களும் கொண்டு கட்டினது அல்ல. அசலான சபையானது தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டிலும், தேவனுடைய சித்தத்தின் மேலேயும் கட்டப்பட்டிருக்கும். எபேசு சபை காலம் தொடங்கி லவோதிக்கேயா காலம் மட்டுமாக அவைகள் சரீரத்தில் பொருத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சாலொமோன் தேவனுடைய ஆலயத்தை கட்டி முடித்ததான அந்த தினமே... கட்டுகிறவர்கள் புறம்பே தள்ளின அந்த ஒதுக்கப்பட்ட மூலைக்கல்லை ஏற்றுக் கொண்டவுடன் அந்தக் கட்டிடம் மேலே செல்லத் துவங்கியது. இப்பொழுது நான் இந்த காரியத்தை ஒவ்வொரு சபையிலும் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய சிந்தைக்கும் மிக மரியாதையுடனும் பயபக்தியுடனும் கூறுகிறேன். இன்றைக்கு நம்மிடமிருக்கும் கட்டுகிறவர்கள் மட்டும் ஒதுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, அவர்களை பரிசுத்த உருளைகள் என்றும் எப்பொழுதுமே அறிக்கையிட்டு கொண்டிருக்கும் விநோதமானவர்கள் என்றும் புறம்பே தள்ளிவிடாதிருப்பார்களானால், அவ்வளவு சீக்கிரமாய் அந்த கட்டிடமானது கட்டி முடிக்கப்படும். 33ஆனால் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? அந்தக் கட்டிடத்தை கட்டி முடித்த பின்பும் அது ஒரு வெறுமையான கட்டிடமாகவே இருந்தது. அதில் மேசைகளும் நாற்காலிகளும் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகவே சாலொமோன் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து முடித்தான். இப்பொழுது பிரதிஷ்டை செய்கிறதான அந்த மகத்தான நாள் வந்தது. வழிபடுகிறவர்கள் எதையாவது ஒன்றை வழிபடுவதற்காக அந்த நாளிலே அந்த கட்டிடமானது பிரதிஷ்டை செய்யப்படவிருந்தது. ஆகவே வழிப்படுவதற்கு ஒன்றும் இல்லாமல் இருக்குமானால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் வீணானதாகிவிடும். இந்த கட்டிடமோ இப்பொழுது பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு ஆயத்தமாயிருந்தது. அங்கேதானே லேவியர்களும், ஆசாரியர்களும் நிற்க, ஆயிரக்கணக்கான எக்காள வாத்தியங்கள் வானத்தை பிளந்து கொண்டிருந்தது. பாவத்திற்கான பலியாக ஆட்டுக்குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக பலியிடப்பட்டுக் கொண்டே இருந்தன. லேவியர்கள் கற்பலகைகளைக் கொண்ட பேழையை தூக்குவதற்காக தங்கள் ஸ்தானத்திற்குச் சென்று நின்று அதன் பக்கவாட்டில் இருந்த வளையங்களில் கம்புகளை செலுத்தி அதைத் தூக்கினார்கள். இரண்டு கற்பலகைகள் இருந்தன ஒரே கல்லால் ஆனவை. ('இவை இரண்டும் ஒன்றே'', ஒவ்வொன்றிலும் சில கட்டளைகள், சில உடன்படிக்கைகள்). இந்த இரண்டு கற்பலகைகளை சேரூபீன்கள் தங்கள் இறக்கைகளை கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்து மூடியிருக்கும் போது... 34ஆகவேதான் பரிசுத்தமாக்கி பிரித்தெடுக்கப்பட்ட இந்த லேவியர்களால் மட்டுமே அதை சுமக்க முடியும். அவர்களைத் தவிர எந்த மனிதனாகிலும் அதைத் தொட்டால் அவன் மரித்துப் போவான். அந்தப்பிரகாரமாக அவர்கள் இந்த பணிக்கென்றே பிரத்தியேகமாக பிரித்தெடுக்கப்பட்டவர்கள். வளையங்களில் செலுத்தும்படி கம்புகளை எடுத்துக் கொண்டனர். தேவனால் மோசேக்கு கட்டளையிடப்பட்டபடியே கட்டியமைத்திருந்த பேழையிலுள்ள வளையங்களில் அந்த கம்புகளைப் பொருத்தினர். அவர்கள் கூடாரத்திலிருந்து அதை தூக்கிக்கொண்டு, எக்காள முழக்கத்தோடும் கீதவாத்தியங்களோடும் முன்னோக்கி நடந்து சென்றனர். யெகோவா தேவனுக்கு பலியிடப்பட்ட மிருகங்களின் புகை மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அவர்கள் அந்த பிரதிஷ்டை செய்யப்படும் கட்டிடத்திற்குள்ளாகக் கடந்து சென்று அதன் இளைப்பாறும் இடத்திற்கு சென்றடையும் மட்டுமாக அதை தூக்கிச் சென்றனர். அங்கு அதை பொருத்துவதற்காக ஒரு மிகப்பெரிய ஸ்தலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் அது சரியாகப் பொருந்தியது. அந்தப் பெட்டியானது அப்படியாக அதனுடைய இளைப்பாறும் இடத்தில் சரியாகப் பொருந்தியபோது, 'தேவன் அந்த தேவாலயம் முழுவதுமாய் நிரம்பத்தக்கதாய் அவ்விடம் இறங்கினார். தேவனுடைய அக்கினி ஸ்தம்பமானது மகா மகிமையாய் இறங்கினது. அம்மகிமையின் நிமித்தமாக ஊழியக்காரர்களினால் அங்கு நின்று ஊழியம் செய்யக்கூடாமல் போயிற்று'' என்று வேதம் கூறுகிறது. 35அங்குதான் அது தன் இளைப்பாறும் இடத்தை கண்டுக்கொண்டது. ஷெக்கினா மகிமை தலைக்கல்லை பின்தொடர்ந்தது. மூலைக்கல்லை அல்ல. அந்த தலைக்கல்லை - முக்கியமானதை. அதுவரை மற்ற கற்கள் எல்லாம் பிரயோஜனமற்று இருந்தன. ஆனால் அந்த முக்கியமான கல்லாகிய தலைக்கல் உள்ளே வந்து தன்னுடைய ஸ்தானத்திற்குரிய நிலையை, அந்த தலைமுறைக்கான இளைப்பாறும் இடத்தை அடைந்த போது அவர்கள் இருந்த இடத்தை தேவனுடைய மகிமை நிரப்பிற்று. அந்த கட்டிடம் முழுவதுமாக ஷெக்கினா மகிமை இருந்தது. அந்த மகிமையின் வல்லமையின் மிகுதியால் ஆசாரியர்களால் ஊழியம் செய்யக்கூடாமலே போயிற்று. 36இப்பொழுது நாம் தேவாலயத்தின் பிரதிஷ்டை பற்றி வாசித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது அப்போஸ்தலர் நடபடிகள் 7ஆம் அதிகாரம் 44ஆம் வசனத்தை மீண்டுமாக பார்ப்போம். மேற்கோளிட்டதிலிருந்து தொடங்குவோம். ஸ்தேவானுடைய முக்கியமான பிரசங்கத்தில், 'தாவீதின் மூலமாக வாக்குறுதி அளிக்கப்பட்டதினாலே சாலொமோன் அவருக்கு ஒரு தேவாலயத்தை கட்டினான்'' அவன் தேவாலயத்தை கட்டுவான் என்று தேவன் தாவீதிற்கு வாக்குறுதி அளித்திருந்தார்... எவ்வண்ணமாக பிரதிஷ்டையின் போது பலியிடப்பட்ட ஆட்டுகுட்டிகள் பலியிடப்படுவதற்கு வருகிறதான அந்த அசலான ஆட்டுக்குட்டிக்கு மாதிரியாக இருக்கிறது... இயற்கையாக இருப்பவை எல்லாம் ஆவிக்குரியவைகளின் மாதிரியாக... இப்பொழுது நடந்த இந்த காரியத்தை குறித்து ஸ்தேவான் குறிப்பிடுகிறதை நம்மால் காண முடிகிறது. 'நம்முடைய பிதாக்களுக்கு தேவனால் கிருபை கிடைத்ததால் சாலொமோன் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். ஆனாலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். தீர்க்கதரிசி உரைத்த வண்ணமாக, 'வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி. நீங்கள் எனக்காக எங்கே வீட்டை கட்டிட முடியும்? வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதப்படி, அப்படியிருக்க நான் வாசம் செய்வதற்கு நீங்கள் எப்படி ஒரு வீட்டைக் கட்ட முடியும்?'' அந்தப்படியே, எவ்வளவு அருமையாய் இருக்கிறது. (எபிரெயர்;. 10:5)... 'ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்,'' தேவன் ஒரு சரீரத்தில் வாசம் செய்யப்போகிறார் - (காலியிடம்)... 'எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.'' ஓ! 37இந்த சரீரமானது பலியிடப்பட்டபோது, சரியான ஆட்டுக்குட்டியானது பலியிடப்பட்டாயிற்று. அதன் பின் வரப்போகிறதை... தேவன் தம்முடைய சொந்த சரீரமாகிய மனவாட்டியிடம் வந்தார். அந்தப்படியே தேவன் சிருஷ்டித்த நூற்றிருபது ஆலயங்கள், அர்ப்பணிப்புக்காக ஆயத்தப்பட்டிருந்தன. அவைகளிலிருந்தெல்லாம் அவிசுவாசம் முற்றிலுமாக நீக்கப்பட்டு மேல்வீட்டு அறையில் பத்து நாட்களாக பிரதிஷ்டைக்காக காத்துக் கொண்டிருந்தனர். எப்பொழுது அவர்கள் முற்றிலுமாக சரணடைந்தார்களோ அப்பொழுது தேவன் மீண்டுமாக ஷெக்கினா மகிமையில் இறங்கி வந்து அவர்கள் இருந்த வீட்டை முற்றிலுமாக நிரப்பினார். 38அங்கே தேவன் என்ன செய்தார்? அந்நாளுக்கான செய்தியாக எப்படி பேழையானது அதனுடைய சரியான இடத்தில் பொருந்தியதோ அதேபோல் தேவன் மீண்டுமாக சரியான வழியில் இறங்கினார். அவர் மனிதருடைய இருதயத்திற்குள் இறங்கினாரேயன்றி ஒரு ஸ்தாபனத்திலோ அல்லது மனிதனுடைய கையினால் கட்டப்பட்ட கட்டிடத்திலோ இறங்கவில்லை. 'கடைசி நாளில் மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஷெக்கினா மகிமையை ஊற்றுவேன். உங்கள் குமாரரும் குமாரத்தியும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். உங்கள் வாலிபர் சொப்பனங்களையும் உங்கள் மூப்பர் தரிசனங்களையும் காண்பார்கள்“ என்று யோவேல் தீர்க்கதரிசி சொன்னது போல நாட்களின் முடிவில் அவர் அவருடைய ஸ்தானத்திற்கு இறங்கினார். தேவன் தன்னுடைய இளைப்பாறும் ஸ்தலத்திற்கு இறங்கினார், அங்கே அவருக்கு இளைப்பாறுதல் கிடைத்தது. கட்டிடங்களில் அல்ல அவருடைய மக்களின் இருதயத்திலேயே அவர் இளைப்பாறுகிறார். 39நிம்ரோத் மனிதர்களைக் கொண்டு நிகழ்த்தின சாதனை அவமானத்தையும் வெட்கத்தையுமே கொண்டு வந்தது. நிம்ரோத் வானளாவிய கட்டிடத்தையோ அல்லது ஸ்தாபனத்தையோ கட்டிட முயற்சித்த போது தேவன் அதை தாறுமாறாக்கினார். அது மனிதர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக வெட்கத்தை ஏற்படுத்தியது. அவர் மனிதர்களுடய பாஷையை தாறுமாறாக்கினதால் அவர்களால் ஒருவரோடொருவர் உரையாட முடியவில்லை. அவர்கள் மத்தியில் இருந்த சகோதரத்துவத்தை உடைத்துப் போட்டது. ஆனால் தேவனோ பிரதிஷ்டைக்காக இருந்த தம்முடைய சொந்த ஆலயத்திற்கும் தம்முடைய சபைக்கும் மக்களிடத்திற்கும் வந்த போது அவர் அதை நிரப்பினார். அவர் சாலொமோனின் தேவாலயத்தை நிரப்பினது போலவே தன்னை அர்ப்பணித்தவர்களை நிரப்பினார். கோட்பாடுகளினாலோ அல்லது ஸ்தாபனங்களினாலோ அல்ல, அவர் அதை தம்மை கொண்டே நிரப்பினார். அவர் ஆலயத்தை தம்முடைய ஷெக்கினா மகிமையினாலே நிரப்பினார். இதே காரியத்தைத் தான் அவர் பெந்தெகொஸ்தே நாள் அன்றும் செய்தார். மேல் வீட்டு அறையில் இருந்த நூற்றிருபது ஆலயங்களையுமே தம்மை கொண்டு நிரப்பினார். அவர்களை பரிசுத்த ஆவியானவரைக் கொண்டே நிரப்பினார். ஷெக்கினா மகிமையானது அவர்கள் மேலாக பிரகாசித்தது. நிம்ரோத்தும் ஒரு ஆலயத்தை கட்டினான். ஆனால் அதிலுள்ளவர்களின் பேச்சு ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள முடியாமல் போயிற்று. நிம்ரோத் அந்த முயற்சியில் தோற்றுபோனான். ஆனால் தேவனோ ஒரே ஒரு கலிலேய பாஷையைக் கொண்டு அவர் என்ன பேசுகிறார் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும்படி செய்தார். அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தேவன் தம்முடைய ஆலயத்திற்கு மட்டுமே. தேவன் தமக்காக அர்பணிக்கப்பட்ட ஆலயத்திற்கு மட்டுமே தவிர வேறு எந்த மனிதனின் முயற்சியினால் ஏற்படுத்தின வெற்றிகளுக்காகவோ அல்லது மனிதனின் கிரியைகளுக்காகவோ அல்ல. தேவன் தம்முடைய கிரியைகளோடேயே நிற்கிறார். 40ஓ, இது மக்களுக்கு அற்பத்தனமாக இருக்கிறது. அவர்களுக்கு அது புரிவதில்லை. அவர்கள் அதை புரிந்துகொள்ளாமல் இருப்பதற்காகவே பிறந்திருப்பதால் அவர்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டார்கள். வேதாகமம் அப்படிதான் கூறுகிறது. அது சரியே. தேவன் எப்பொழுதுமே தம்முடைய ஆலயத்தை நிரப்புகிறார். அர்ப்பணிப்பின் நாளிலே தேவன் தம்முடைய ஆலயத்தை நிரப்புகிறார். அவர் அதை தம்மைக் கொண்டே நிரப்புகிறார். இன்றைக்கும் காரியம் மாறவில்லை. தம்மை முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணிக்கும் ஒவ்வொரு ஆலயத்தையும் தேவன் நிரப்புகிறார். ஆலயம் என்று சொல்லும்போது இந்த சிறு கட்டிடத்தை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஸால்ட் லேக் (Salt Lake) பட்டிணத்தில் இருக்கும் கட்டிடமும் அல்ல. ரோமில் இருக்கும் அந்த ஆலயத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால் தேவன் வாசம் செய்வதற்கு விரும்பும் ஆலயம் நீங்கள்தான். அதிலிருந்து கொண்டு தேசங்களெல்லாம் தம்மை அறிந்து கொள்ளும்படியாக அவரை வெளிப்படுத்த விரும்புகிறார். நீங்களே ஜீவிக்கிற தேவனின் சொரூபமாய், தேவன் கிரியை செய்ய விரும்பும் ஒருவரக இருக்கிறீர்கள். ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ அவர்கள் உலகத்தின் மாயமாலங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வார்த்தையின் ஒழுங்கிலே வந்தால் அவர்கள் சரியாக இருந்தால்... அது சாலொமோன் எப்படியாக மோசேயைப் பின்பற்றினானோ, அவ்விதமாக தேவன் செய்தது போலவே மோசே செய்தான். தேவன் அதை எப்பொழுதுமே கனப்படுத்துகிறார். 41அந்தப்படியே நாம் மட்டும் அந்த அசலான அர்ப்பணிப்போடு நம்முடைய இருதயத்தை திறந்து நம்மை வெறுமையாக்குவோமானால், அவர் தம்முடைய ஷெக்கினா மகிமையினால் நம்முடைய ஆலயத்தை நிரப்புவார். அப்பொழுது ஜீவிக்கிற தேவனானவர் ஜீவிக்கிற சபையின் மத்தியில் உலாவி ஜீவிக்கிற மக்கள் மத்தியில் தம்முடைய மகிமையை பிரஸ்தாபிப்பார். பின்பு ஒரு நாளிலே இப்பக்கத்திலிருந்து ஒருவர், அப்பக்கத்திலிருந்து மற்றொருவர் வேறொரு இடத்திலிருந்து இன்னொருவர் என்று எல்லோரும் ஒன்றாக மணவாட்டியாக சேருவார்கள். அப்பொழுது நாம் ஆகாயத்திலே அவரை சந்திக்கும்படி எடுத்துக் கொள்ளப்படுவோம். இப்பொழுதும், இது ஒரு அழகான சபை. மக்கள் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினாலே தங்கள் ஜீவனத்திற்கான வருமானத்தை கொண்டு இந்த ஆராதனை ஸ்தலத்தை ஆராதிப்பவர்கள் வந்து ஆராதிப்பதற்காக இன்றைக்கு பிரதிஷ்டை செய்கிறார்கள். ஆனால், ஆராதனை செய்கிற ஒவ்வொருவரும் ஆராதனைக்காக இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படும்போது தன்னுடைய சொந்த ஆலயத்தையும் சேர்த்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய உத்தமமான ஜெபம். அதுவே உண்மையான அர்ப்பணிப்பு. 42நமக்கு தான் காலம் கடந்து செல்கிறது, ஆனால் தேவனுக்கு காலம் என்பதே இல்லை. நாம் அதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது எவ்வளவு காலம் தாமதமாயிருக்கிறது? நான் இப்பொழுது வயதானவர்களை நோக்கிப் பார்க்கிறேன். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் நேரம் தாமதமாக இருக்கக்கூடும். வாலிபர்களையும் வாலிப ஸ்திரீகளையும் நோக்கிப் பார்க்கிறேன். பாருங்கள், அன்றொரு நாளிலே சிறு பிள்ளைகளாகிய அந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் வெட்டப்பட்ட நிலையிலே கண்டெடுத்தனர். ஓர் ஆண்டிலே எத்தனை பேர் மரிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மாரடைப்பிலும், புற்று நோயினாலும், போலியோ நோயினாலும், சாலை விபத்திலும், இப்படி பல விதங்களில் மரிக்கின்றனர். நாம் இளமையாயிருந்தாலும் வயதானவர்களாயிருந்தாலும் அதை அறிய வேண்டியதில்லை. நம்முடைய நேரம் எப்பொழுது வரும் என்பதோ அல்லது உன்னுடைய பெயர் எப்பொழுது அழைக்கப்படும் என்பதோ நமக்கு தெரியாதே‚ தேவன் ஒருவரைத் தவிர வேறு ஒருவருக்கும் அது தெரியாது. அது சரியே‚ இன்றைக்கு ஜீவனுள்ள தேவனை ஆராதிப்பதற்காக இந்த கட்டிடத்தை பிரதிஷ்டை செய்ய வந்துள்ள ஆராதிக்கிறவர்கள் எல்லோரும் இந்த வேளையில் ஏன் நம்மையும் பிரதிஷ்டை செய்து அவரைக் கொண்டு நம்மை நிரப்ப அனுமதிக்கக்கூடாது? அப்பொழுது ஜீவிக்கிற தேவனுடைய வீடும் சபையுமாகிய இந்த மனித சரீரத்திற்குள் அவருடைய ஷெக்கினா மகிமை மீண்டும் திரும்பி நம்முடைய நாடு முழுவதிலும் மற்றும் இந்த நகரங்களிலும் எல்லா இடங்களிலும் எழுப்புதல் பரவுவதை நாம் காண முடியும். அந்தப்படியே ஏன், அவர்களால் அதை நிறுத்த முடியாத அளவு அதற்கு சாத்தியமே இல்லாதபடி மிகுந்த சத்தமும் உண்டாயிருக்கும். 43ஸ்தேவானை நிறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? பெருங்காற்று அடிக்கும் போது கொழுந்து விட்டு எரியும் வீட்டைப் போலல்லவா இருந்தான். சனகரிம் சங்கம் கூட அவனை தடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, மரணத்தினாலேயே அவனை தடுக்க முடியவில்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவன் அப்படியாக ஜீவித்தான். அவன் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறான். அவன் தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடாக இருப்பதாலும் நித்திய ஜீவனை பெற்றிருந்ததினாலும் என்றென்றைக்கும் ஜீவித்துக்கொண்டேதான் இருப்பான். இந்த காலை வேளையில் இங்கு அநேக காரியங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அவை எல்லாவற்றைக் காட்டிலும் சபை செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. தேவனுடைய பணிக்காக இந்த கட்டிடத்தை அர்ப்பணிக்கும் பொழுது நம்மையும் கூட அர்ப்பணிக்க வேண்டும். ஒரு நிமிடம் இப்பொழுது நாம் நிற்கலாம். ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பும் உங்கள் சொந்த விதானத்தில் ஜெபியுங்கள். நானும் இந்த பிரசங்க பீடத்திலிருந்து என்னையும் கூட மீண்டும் ஒருவிசை தேவனுடைய சேவைக்கென்று அர்ப்பணிக்கிறேன். இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் தேவனுக்காக இந்த கட்டிடத்தை அர்ப்பணிக்கும் இந்த வேளையில் நம்மையும் கூட அர்ப்பணிப்போம். 44எங்கள் பரலோக பிதாவே, இந்த காலை வேளையிலே நாங்கள் இங்கு மிக தாழ்மையோடும் உத்தமத்தோடும் கூடி வந்திருக்கிறோம். நீர் இந்த சபையோருக்கு அளித்த அன்பை மிகவும் மெச்சுகிறோம். அவர்களுக்கு ஆராதிப்பதற்காக ஒரு கட்டிடத்தையும் கொடுத்திருக்கிறீர். சபையோருக்கு வார்த்தையை பிரசங்கிக்கதக்கதான ஒரு மேய்ப்பனையும் கொடுத்திருக்கிறீர். இப்பொழுதும் பரலோகப் பிதாவே, ஆராதனைக்காக ஒரு இடம் அர்ப்பணிக்கப்படுகின்ற போது, உம்முடைய வார்த்தையில் உரைக்கப்பட்ட இந்த நாட்களுக்கான திட்டத்திற்கு புறம்பாக உள்ள எல்லா அவிசுவாசத்தையும், எல்லா கொடூரமான எண்ணங்களையும், உம்மைப் போல இல்லாமலும் உம்முடைய வார்த்தைக்கு விரோதமாகவும் செயல்படுகிறவைகள் எதுவாக இருந்தாலும் சரி, மற்ற கோட்டுபாடுகளானாலும் மற்றும் ஸ்தாபனங்களிலிருந்து எழும்புகிற எண்ணங்களாயினும், அல்லது பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாயிருந்து கடந்து சென்ற எந்த ஒரு நபரோ, அவர் இங்கிருக்கிறவராயிருந்தாலும் வேறு எங்கிருக்கிற அயலானாயிருந்தாலும் அவரைப் பற்றி எழுகிற எண்ணங்களாயிருந்தாலும் சரி, ஆராதிக்கிறவர்களாகிய நாங்கள் அவை எல்லாவற்றையும் புறம்பே தள்ளுகிறோம். வேறு ஒருவர் சொல்லுகிற காரியங்கள் அல்ல நீர் உரைக்கிறவைகள் மட்டுமே‚ ஏனென்றால், 'தேவனே சத்தியபரர், மற்ற எல்லா மனிதனின் வார்த்தைகளும் பொய்'' என்று எழுதியிருக்கிறதே. கிறிஸ்துவின் வெளிப்பாட்டையும் உண்மையான வார்த்தையையும் விசுவாசிக்கக் கூடாதபடிக்கு அதற்கு விரோதமாக எது இருக்குமானாலும் அதை எங்களிடத்திலிருந்து எடுத்து போடும் ஆண்டவரே. ஏனென்றால் அவர் பேதுருவிடம், 'இந்த கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்'' என்று சொன்னாரே நாங்களாகவே அதைப் புறம்பே தள்ளி வைக்கிறோம். அதை புறம்பே தள்ளுகிறோம். அதற்குப் பதிலாக தேவனுடைய ஒரு உண்மையான சபையினுடைய அஸ்திபாரமாகிய பரிசுத்த ஆவியென்னும் அந்த பிரதான மூலைக் கல்லையே ஏற்றுக் கொள்ளுகிறோம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம். 45பிதாவே, இந்த சிறு சபையை ஆசீர்வதியும். இந்த கட்டிடங்கள் நிலைத்திருப்பதாக. அதிலே காலங்கள் மாறி காலங்கள் ஒவ்வொரு ஆராதனையிலும் விசுவாசிகள் கூடுவார்களாக. அவர்கள் ஒருவரிடத்திலிருந்து ஒருவர் பிரியக்கூடாதபடி தேவனுடையை வீட்டிற்குள் ஒன்றுகூடி வரத்தக்கதான அப்பேற்பட்ட தேவ அன்பு அவர்கள் மத்தியில் இருப்பதாக. அதை அருளும் ஆண்டவரே. நீர் (அவர்களைப் பார்த்து, 'நீங்கள் உலகத்திற்கு உப்பாயிருக்கிறீர்கள்'' என்று சொன்னது போலவே) அவர்களை அப்பேற்பட்ட உப்பாய் மாற்றும். அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தினர் அவர்கள் பரிசுத்த ஆவியினால் செழிப்பும் முழுமையுமாய் இருப்பதைப் பார்த்து அப்படி ஜீவிக்க அவர்களும் வாஞ்சிக்கும் அளவிற்கு அந்த ஜீவியம் இருப்பதாக. அதை அருளும் ஆண்டவரே. அவர்களை சாட்சிகளாய் மாற்றும். அதை அருளும் தகப்பனே. இப்பொழுதும் எங்கள் ஒவ்வொருவரையும் பொறுப்பெடுத்துக் கொள்ளும். சபையின் இந்த கட்டிடத்தை உம்மிடத்தில் தரும்பொழுதே எங்களையும் கூட உம்மிடத்தில் தாழ்மையாய் அர்ப்பணிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர்தாமே தம்முடைய முழு தெய்வீக வல்லமையோடு ஷெக்கினா மகிமையில் நித்தியத்திலிருந்து எங்கள் உள்ளத்திற்குப் பிரவாகித்து வருவீராக. இந்த கடைசி நாட்களில் உம்;முடைய வாசஸ்தலமாகிய எங்களைக் கண்டடைந்து செய்தியாளர்களாக சேவைக்கென்று அழைத்துக் கொள்ளும். பிரசங்க பீடத்திலிருந்துதான் என்றல்ல, பெட்ரோல் நிரப்பும் இடமாக இருந்தாலும் சரி, அல்லது குளியறையாக இருந்தாலும் சரி அது எங்கு வேண்டுமானாலும் சரி, பால்காரரிடமோ, பேப்பர் போடும் சிறுவனிடத்திலோ அல்லது எந்த வேலையாக இருந்தாலும் சரி, சாட்சி பகரச் செய்வீராக. எங்களை சாட்சிகளாகவும் ஷெக்கினா மகிமையினால் பரிசுத்த ஆவியாகிய அவராலேயே நிரப்பப்பட்டு ஜீவிக்கிற கற்களாகவும் ஆக்குவீராக. எங்கள் இருதயத்தையும் ஜீவியத்தையும் நிரப்பும் பிதாவே. இந்த பூமியிலே உள்ள எங்களுடைய எல்லா கடமைகளும் முடியும் போது, நாங்கள் ஒவ்வொருவரும் தேவன் எங்களுக்காக அருளின பிரகாரமாக செதுக்கப்பட்டவர்களாக அந்த மகத்தான மணவாட்டி என்னும் சபையில் பிரிவினை ஏதுமின்றி ஒன்றாகக் கூடுவோமாக. அந்தபடியே இந்த பூமியிலே வாசம் பண்ணும் கூடாரத்திலிருந்து ஒரு இமைப்பொழுதிலே அவள் மறுரூபமாகி மத்திய ஆகாயத்தில் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணவிருந்தில் அவரை சந்திப்பதற்காக அவரோடு எடுத்துக்கொள்ளப்படுவோமாக. அவ்வாறே பிதாவே, நாங்கள் இந்த ஆலயத்தையும் எங்களையும் எங்களால் முடிந்த அளவிற்கு பிரித்தெடுக்கப்பட்டும் பரிசுத்தமாகவும் உம்முடைய பணிக்காக அர்ப்பணிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென். நீங்கள் அமரலாம். 46எத்தனை பேர், ''தேவனுடைய கிருபையினாலும் உதவியினாலும் என்னுடைய இருதயத்தை ஒப்படைக்கிறேன். ஆண்டவராகிய இயேசுவே, நீ வந்து என்னை உம்முடைய நன்மையினால் நிரப்பிடும். நான் என்னவாக இருக்க நீர் விரும்புகிறீரோ அந்தப்படியே என்னை ஆக்கிடும். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பதற்கு எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நீர் என்னை வைத்த நிதானத்திற்கு மாறாக இருந்தாலும் நிச்சயமாய் என்னை தாறுமாறாக வெட்டப்பட்ட கல்லாகிப்போக விடாதேயும். அன்றியும் நான் எப்படியாக இருக்க வேண்டும் என்று நீர் விரும்பின பிரகாரமாக என்னை உருவாக்கிடும் அந்த அறுப்பு வாளுக்கு என்னை அர்ப்பணிப்பேனாக, என்று கூறுவீர்களாக. அப்படிதான் நாம் எல்லோரும் விரும்புகிறோம் இல்லையா? இப்பொழுது நான் ஆராதனையை மேய்ப்பரிடம் ஒப்படைக்கும் இந்த வேளையில், நாம் எல்லோரும் நம்முடைய கரத்தை உயர்த்தி சபையின் இந்த மகத்தான பழைய பாடலைப் பாடுவோம். நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன், என்னை முதலாக நேசத்த அவரை நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன் அவர் என் இரட்சிப்பை அந்த கல்வாரி மரத்தில் பெற்றாரே‚ இப்பொழுது இதை வாய்க்குள்ளாகவே பாடுவோம் (Humming). (சகோதரன் பிரான்ஹாம் நான் நேசிக்கிறேன் வாய்க்குள்ளாகவே பாடுகிறார்.) இப்பொழுது ஒருவரோடு ஒருவர் கை குலுக்கி, 'சகோதரனே, சபையின் கல்லாகிய உம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக'' என்று கூறுங்கள். சகோதரனே, சபையின் கற்களாகிய உம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. என்னை முதலாக அவர் நேசித்தார். அவர் என் இரட்சிப்பை அந்த கல்வாரி மரத்தில் பெற்றாரே‚ இப்பொழுது நாம் நம்முடைய கண்களை மூடி, தலைகளை தாழ்த்தி நம்முடைய இரண்டு கரங்களையும் உயர்த்துவோமாக. நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன். என்னை முதலாக நேசித்த அவரை நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன் அவர் என் இரட்சிப்பை அந்த கல்வாரி மரத்தில் பெற்றாரே‚